இறந்த மானின் கறியை பங்கு போட்ட 7 பேருக்கு அபராதம்

தேன்கனிக்கோட்டை அருகே உயிரிழந்து கிடந்த புள்ளி மானின் உடலை வெட்டி கறியை பங்கு போட்ட 7 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-12-26 01:16 GMT

அபராதம் விதிக்கப்பட்டவர்கள் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கூச்சுவாடி கிராமத்தில் உள்ள பொது குளத்தில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

வனத்துறையினர் அங்கு செல்வதற்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த செல்லப்பன் (65) ராம்ராஜ் (31) ராஜிவ் (31) நாகராஜ் (28) சிவராஜ்குமார் (31) மாரியப்பன் (65) மற்றும் 18 வயது சிறுவன் உள்ளிட்டோர் வனத்துறையினருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் குளத்தில் உயிரிழந்த கிடந்த புள்ளிமானின் உடலை எடுத்து வெட்டி அதன் கறியை பங்கு போட்டது வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஓடை அருகே 7 பேரையும் மடக்கி பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த புள்ளிமான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடினாலோ, வன விலங்கு தொடர்பான பொருட்களை வைத்திருந்தாலோ வன உயிரின சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் அவர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News