தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் உள்ளவர்கள் 7 பேர் பணியிட மாற்றம்
வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 பேர் வட்டாட்சியர் நிலையில் உள்ளவர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேற்று உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் சத்திரம் நிர்வாக வட்டாட்சியராக இருந்த ஜி.ஜெயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் துறையின் பறக்கும் படை தனி வட்டாட்சியராக இருந்த வி.எஸ்.சக்திவேல் சத்திரம் நிர்வாக தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
திருவிடைமரூதூர் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியர் ஆர்.செந்தில்குமார், தஞ்சாவூர் முத்திரை கட்டணம் தனி வட்டாட்சியராகவும், அப்பிரில் பணியாற்றிய என்.பெர்சியா தஞ்சாவூர் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர் டி.மதுசூதனன், திருவிடைமருதூர் சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய டி.பி.சுசீலா திருவிடைமருதூர் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியர் ஜி.சிவக்குமார், தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறையின் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.