ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கள்ள சாராயம் விற்ற 7பேர் கைது
கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர்
Update: 2023-12-17 09:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், பிரபு மற்றும் போலீசார் போதை பொருள் தடுப்பு குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மனைவி ஜோதி (60) . மேலும் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி ராதிகா (47) அதே பகுதியை சேர்ந்த கதிர்வேலன் என்பவரின் மனைவி சரஸ்வதி (50) . பால்னாங்குப்பம், பெருமாள் வட்டம் பகுதியை சேர்ந்த புகழேந்தி (52) கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் தில்லைமணி (38) புள்ளானேரி பகுதியை சேர்ந்த திருப்பதி (42) ஆகியோர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களை கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் வக்கணம்பட்டி அடுத்த மந்தை தெரு பகுதியை சேர்ந்த தமிழ்மணி என்பவரின் மகன் சூர்யா (23) என்பவர் கள்ள சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து நான்கு லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதில் புகழேந்தி, தில்லை மணி, திருப்பதி, சூர்யா, ஆகிய 4 பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.