சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரிக்கு 7 ஆண்டு சிறை
சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 35). எம்.பில் பட்டதாரி. இவர் வீட்டிலேயே மாணவ, மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி இவரிடம் டியூசன் படித்த 3-ம் வகுப்பு சிறுமியை வீட்டில் தனி அறைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். சிறை தண்டனை பெற்ற விக்னேசுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.