அரக்கோணம் காவல் நிலையம் அருகே 77 கிலோ குட்கா பறிமுதல்

அரக்கோணம் காவல்நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை மற்றும் குடோனுக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.

Update: 2023-11-01 09:14 GMT

பறிமுதல் செய்யப்பட குட்கா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ் ,பான்பராக், கூல் லிப் உள்ளிட்ட போதை தரும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் கடைகளில் பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஜுப்லி ரோட்டில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது . இது தொடர்பாக கடை உரிமையாளரான திருவள்ளூரை சேர்ந்த கோதண்டன்( 50 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் 77 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்து தெரிந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் லட்சுமிநாராயணன், கார்த்தி ஆகியோர் அங்கு சென்று குடோனுக்கு சீல் வைத்தனர். அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் குடோனில் பதுக்கி வைத்திருந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News