குமரி : கடலில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவர் பலி

கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கடலுக்கு சென்ற போது அலைகளில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2023-12-27 03:56 GMT
கடலில் மூழ்கி சிறுவன் பலி

குமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி மகன் ஜெப்ரின் சாம்ராஜா (13). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது சித்தப்பா சரவணன் நேற்று முன்தினம் தனது இரு குழந்தைகள் மற்றும் ஜெப்ரின் சாம் ராஜா ஆகியோருடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக நாகர்கோவில் அடுத்த மணக்குடியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்தார்.        இவர்கள் நேற்று மாலை மணக்குடியிலுள்ள கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த ராட்சத அலையில் ஜெப்ரின் சாம் ராஜா மற்றும் சரவணனின்  2 பிள்ளைகள்  என மூன்று பேரை அலை இழுத்து சென்றது.       

Advertisement

இதை பார்த்ததும் மீனவர்கள் உதவியுடன் இரண்டு பேரை மீட்டனர். ஆனால் ஜெப்ரியின் சாம்ராஜ் சற்று ஆழமான பகுதியில் சிக்கினார். பின்னர் அனைவரையும் மீட்டு,  நாகர்கோவிலுள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெப்ரின் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News