மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;

Update: 2024-06-22 08:16 GMT

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.  

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் கோபி, கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுலு. இவர்களின் மகள்கள் சஞ்சனா (12), ரோஷினி (7). சஞ்சனா 7-ம் வகுப்பும், ரோஷினி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சனா பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் சுடுதண்ணீர் வைக்க ஹீட்டர் போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக சஞ்சனாவை மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

Advertisement

அங்கிருந்த செவிலியர் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி சஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News