நெல்லையில் நேற்று 8 பேர் மனு தாக்கல் !
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் ஒரே நாளில் எட்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 06:20 GMT
ஆட்சியர் அலுவலகம்
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று (மார்ச் 26) ஒரே நாளில் எட்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (மார்ச் 27) மாலையுடன் மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.