80 மூட்டை பருத்தி 2.60 லட்சத்துக்கு ஏலம்

அரூர் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் 2. 60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்;

Update: 2025-03-25 02:59 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி, கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று மார்ச் 24 நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 20 விவசாயிகள் 80 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6,510 முதல் ரூ.7,200 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News