வாணியம்பாடி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் தங்கநகை கொள்ளை

வாணியம்பாடி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் தங்கநகை மற்றும் 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-14 15:47 GMT

கைது செய்யப்பட்ட சகோதரர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, அடுத்த ஆலங்காயம் அருகே பெத்தூர் பகுதியில் கடந்த 09 ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியை பத்மாவதி என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 80 சவரன் தங்கநகை மற்றும் 4 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்ற நிலையில்,

இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர், மேலும் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தங்கநகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில்,

அரசு பள்ளி, ஆசிரியை வீட்டில் கொள்ளையில் ஈடுப்பட்ட கூவல்குட்டை பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான. வல்லரசு (28) சக்திவேல் (18), ஆகிய இருவரையும், ஆலங்காயம் காவல்துறையினர் கைது! செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,

இதற்கு மூளையாக செயல்பட்ட குறும்பேரி பகுதியை சேர்ந்த பாபு ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூன்று பேரும் ஆசிரியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்று பணம் மற்றும் நகைகளை மீட்க சென்ற போது. அருகிலுள்ள பெத்தூர் மின்வாரிய அலுவலகத்தின் அருகில் உள்ள நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள நகையை மீட்ட சென்றபோது கை விலங்குடன் பாபு என்ற விசாரணை கைதி காவலர்களை தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் அதிர்ந்து போன நிலையில்,

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவரை மட்டும் கைது! செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 15 சவரன் தங்க நகை மீட்ட காவல்துறையினர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைவிளங்குடன் தப்பிச்சென்ற பாபு என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டு வந்ததும் அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் மற்றும் நகைகள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவரும் வந்துள்ளது அவரை பிடித்தால் மட்டுமே எந்தெந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளார் அவரிடம் இருந்து எத்தனை சவரன் நகை மற்றும் பணங்கள் மீட்கப்படும் என்பது தெரியவரும்.

மேலும் இவர்கள் இது போன்ற சம்பவத்தில் எந்தெந்த பகுதியில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து தீவிரமாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் பிடித்துச் சென்றபோது கை விளங்குவுடன் தப்பி சென்ற விசாரணை கைதி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News