காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் 86.98% பெற்று மாநிலத்தில் 33 வது இடத்தில் உள்ளது
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 15:21 GMT
தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் 86.98% பெற்று மாநிலத்தில் 33 வது இடத்தில் உள்ளது. 6676 மாணவர்களும் 7346 மாணவிகள் என மொத்தம் 14,022 பேர் தேர்வு எழுதிய நிலையில், 5429 மாணவர்களும் , 6767 மாணவிகள் என மொத்தம் 12,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 81.32 சதவீதமும், மாணவிகள் 92.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 7816 பேர் தேர்வு எழுதிய நிலையில், 6377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் 81.59 %தேர்ச்சி. மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32 இடம் பிடித்ததுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு +1 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.