வேலூர் மாவட்டத்தில் 9 மதுவிலக்கு வழக்குகள் பதிவு
வேலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 9 மதுவிலக்கு வழக்குகள் மற்றும் ஒரு கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Update: 2024-03-19 02:56 GMT
வேலூர் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக 9 மதுவிலக்கு வழக்குகள், மற்றும் ஒரு கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.