90 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

அட்டை;

Update: 2025-02-21 04:11 GMT
சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எலும்பு முறிவு மருத்துவர் காமராஜ், கண் மருத்துவர் காயத்ரி, மனநல மருத்துவர் பாக்யராஜ், காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்ற 120 மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர். அதில் தகுதி வாய்ந்த 90 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Similar News