செய்யாறு போக்குவரத்து பணிமனையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கம்

செய்யாறு போக்குவரத்து பணிமனையில் 90 சதவீத பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கம்

Update: 2024-01-09 08:25 GMT

செய்யாறு போக்குவரத்து பணிமனையில் 90 சதவீத பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கம் 

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை எதிரே சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளடக்கிய தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்து பேருந்தை வழிமறித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் மொத்தம் 59 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அனுபவமிக்க தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு வழக்கம்போல காலை மூன்று மணிமுதல் தற்போது 7 மணி நிலவரப்படி இந்த நேரத்திற்கு இயக்கப்படவேண்டய 41 பேருந்துகளில் 40 பேருந்துகள் என 95 சதவித பேருந்துகள் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு பேருந்து நிலையம் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, சி.பி.எம், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து பணிமனை முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறித்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி பணிமனையிலிருந்து வெளியே வரும் பேருந்தை வழிமறித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செய்யாறு டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன் ஆகியோர் தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். அதனையடுத்து சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்துவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றதும் பேருந்துகள் வழக்கம்போல பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றன.
Tags:    

Similar News