92 பேர் கோர்ட்டில் ஆஜர்

ஆஜர்;

Update: 2025-06-11 03:48 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.மாணவி இறப்பை கண்டித்து ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக 916 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து வந்த அப்போதைய டி.ஐ.ஜி., அபிநவ்குமார் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி தாக்கியது, எஸ்.எப்., வாகனத்தை அடித்து நொறுக்கியது தொடர்பான வழக்கில் 119 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில், 3 பேர் இறந்த நிலையில், மீதமுள்ள 116 பேரும் கோர்ட்டில் ஆஜராகுமாறு போலீசார் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. வழங்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி ரீனா முன்னிலையில் 92 பேர் நேற்று நேரில் ஆஜராகினர். 24 பேர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும், ஜூலை 9ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, அனைவரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Similar News