மதுரை மாவட்டத்தில் 95.19% தேர்ச்சி

மதுரை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.19% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-07 01:02 GMT

மதுரை மாவட்டத்தில் 95.19% தேர்ச்சி

மதுரை மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 16176 மாணவர்களும் 17508 மாணவிகளும் என மொத்தம் 33684 பேர் தேர்வு எழுதியுள்ளார்கள். தேர்வுத்துறை வெளியிட்ட முடிவின்படி 15015 மாணவர்கள் 17049 மாணவிகள் ஆக மொத்தம் 32064 பேர் மாவட்ட அளவில் 95.19% தேர்ச்சி பெற்றுள்ளனர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10309 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். அதில் 9435 மாணவ தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள் மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகளில் 134 பள்ளிகள் 100% அடைந்துள்ளனர். அதில் 25 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 2194 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News