100 ஆண்டுகள் பழமையான மரம் சிவன்மலையில் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிப்பு !
காங்கேயம் அடுத்த சிவன்மலையில் நூறு ஆண்டுகள் பழமையான மரம் முடிந்து விழுந்ததில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-07-13 10:08 GMT
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே சுமார் 100 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. பழமையான மரம் என்பதால் மரத்தின் மீது கரையான் அரித்து மரம் உழுத்து போயிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வீசிய பலத்த காற்றில் அந்த மரம் பாதியாக முடிந்து அருகே இருந்த மின்கம்பிகளின் மீது விழுந்ததில் மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது ஏன்னா அந்த மின் பாதையில் பலத்த வெடிச்சத்தம் போல் தீப்பொறிகள் பறந்து விழுந்தது மேலும் அந்த கம்பிகளின் வழியே வீடுகள் கடைகளுக்கு செல்லும் மின்சாரம் தடைப்பட்டு அப்பகுதியில் இருள் சூழ்ந்தது. இதனை பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.