சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் 2½ பவுன் நகை மாயம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் 2½ பவுன் நகை மாயமானது குறித்து விசாரணை;
Update: 2024-02-28 01:19 GMT
நகை மாயம்
வாழப்பாடி அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள குளியலறைக்கு சென்று குளிக்கும் போது 2½ பவுன் நகையை அவர் கழற்றி வைத்துள்ளார். பின்னர் அவர் அதை எடுக்காமல் மறந்துவிட்டு வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்து நகை குறித்து ஞாபகம் வந்ததும் மீண்டும் குளியலறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு நகை இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நகை மாயமானது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காவிட்டாலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.