திண்ணையில் இருந்து தவறி விழுந்து 9- மாத ஆண் குழந்தை உயிரிழப்பு !
திண்ணையில் இருந்து தவறி விழுந்து 9- மாத ஆண் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
By : King 24x7 Angel
Update: 2024-03-28 10:53 GMT
திண்ணையில் இருந்து தவறி விழுந்து 9- மாத ஆண் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கருப்பூர், சின்னமலை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் வயது 34. இவரது 9- மாத ஆண் குழந்தை பவனிஸ். மார்ச் 23ஆம் தேதி லோகநாதன் வீட்டு முன்பு இருந்த திண்ணையில் இருந்து எதிர்பாராத நேரத்தில் பவனிஷ் கீழே விழுந்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த 9- மாத கை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஒன்பது மாத கைக்குழந்தையின் உடலை, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.