குடியிருப்பு பகுதியில் 3 குட்டிகளுடன் உலா வந்த கரடி..!
குடியிருப்பு பகுதியில் 3 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 14:21 GMT
உலா வந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சமீப நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக அரவேனு பெரியார் நகர், கிருஷ்ணா புதூர் கண்ணிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி கரடிகள் நடமாட்டம் காணபடுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி RKC காலனியில் நேற்று நள்ளிரவு தாய் கரடி ஒன்று தனது 3 குட்டிகளுடன் உலா வந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.