ஆத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் பலி

ஆத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் பலியானர்.

Update: 2024-02-06 10:31 GMT
கோப்பு படம் 

கெங்கவல்லி:ஆத்தூர் அருகே வளையமாதேவி அருகே வளை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(50). இவரது மகன் தேவேந்திரன், மருமகள் பானுப்பிரியா. நேற்று தேவேந்திரன் மகன் அஸ்வந்து(5)க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவனை சேகர் மற்றும் பானுப் பிரியா, டூவீலரில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். வளையமாதேவி பனந்தோப்பு அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ,டூவீலர்மீதுமோதியது. இதில் அஸ்வந்த், சேகர், பானுப்பிரியா ஆகியோர் காயம் அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிறுவன் அஸ்வந்த்பரிதாபமாக உயிரிழந்தான்.சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News