நத்தம் அருகே கயிற்றில் தூரி கட்டி விளையாடிய சிறுவன் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 12 வயது சிறுவன் கயிற்றில் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தூரிக்கயிறு கழுத்தில் இறுக்கியது பலியானன்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-16 12:25 GMT
இறந்த சிறுவன்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ராவுத்தம்பட்டியை சேர்ந்த சின்னராசு மகன் குமரன் (வயது 12). நேற்று மாலை அவருடைய வீட்டில் கயிற்றில் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தூரிக்கயிறு கழுத்தில் இருக்கியது நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை உறவினர்கள் மீட்டு அவசர ஊர்தி மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குமரன் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.