மூதாட்டி மீது கார் மோதி விபத்து.
ராமனூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.;
By : King 24x7 Website
Update: 2023-12-25 16:59 GMT
ராமனூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ராமானுர், நல்லுசாமி மில்போர் அருகே வசித்து வருபவர் தண்டபாணி மனைவி அமராவதி வயது 65. இவர் டிசம்பர் 22ஆம் தேதி இரவு 8:15- மணியளவில் ராமானூரில் உள்ள புஷ்பா மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த ஸ்விப்ட் கார், நடந்து சென்ற அமராவதி மீது பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமராவதிக்கு வலது கை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த, அமராவதி மருமகன் செல்வகுமார் வயது 50 என்பவர், இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.