கோயில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சாம்புறம் பகுதியில் கோயில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் ராமவர்மன் புது தெரு பகுதியை சேர்ந்தவர் மோகன் (60). அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த மாதம் 4-ம் தேதி கோயில் திருவிழாவின் போது கட்டப்பட்டிருந்த துணி கொடி, தோரணம் போன்றவற்றை அறுத்து கீழே போட்டு எரிக்கப்பட்டது. இதை மோகன் தட்டி கேட்டபோது அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (44) என்பவர் தாக்கியதாக அவர் மீது மோகனன் போலீசில் புகார் செய்தார்.
இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு மோகன் தெருமுக்கு என்ற பகுதியில் பொருள்கள் வாங்க சென்றபோது அங்கு வந்த சுரேந்திரன், மோகனனை பார்த்து தகாத வார்த்தையில் பேசி வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் தோரணத்தை எரித்தது போல உன்னையும் உன் குடும்பத்தினரையும் தீ கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் மோகன் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரன் மீது போலீசார் வழக்குப்பு செய்து விசாரித்து வருகின்றனர்.