முத்துப்பேட்டை அருகே முன்விரோதத்தில் தகராறு: 2பேர் மீது வழக்கு

முத்துப்பேட்டை அருகே முன் விரோதத்தில் தகராறில் இரண்டு பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-12-11 14:18 GMT

கோப்பு படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளக்கம் கோவிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார் வயது 49. இவருக்கும் தில்லைவிளாகம் எடையர் காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் விக்னேஷ் வயது 29 என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரண்டு பேரும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News