முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு
பட்டியலின நர்சிங் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சுதந்திர தொழிலாளர் கட்சியினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது.
Update: 2023-12-29 06:10 GMT
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 27ஆம் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த பட்டியலின நர்சிங் மாணவி மருதலெட்சுமி மரணத்திற்கு நீதி கேட்டு, உண்மை குற்றவாளிகளை கைது செய்து எஸ்சி,எஸ்டி வழக்கு பதிவு செய்ய கோரியும், குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும், பட்டியல் இன மக்கள் வாழ தகுதியற்றதாக சிவகங்கை மாவட்டத்தை அறிவிக்க கோரியும் சுதந்திர தொழிலாளர் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 21 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்