ரிஷிவந்தியம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு !

வாலிபனுக்கு கொலைமிரட்டல் விடுத்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-03-06 04:33 GMT

வழக்குப் பதிவு

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சபரிவாசன், 15; இவர், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி இரவு 10:30 மணியளவில் வீட்டின் அருகே இருந்தவர்களிடம், யார் நீங்கள் என கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்தழகன், திருஞானசம்பந்தம், அருள்மணி, பரமசிவம் ஆகிய 4 பேரும் சபரிவாசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News