இரு குடும்பத்தினர் தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு !

சின்னசேலம் அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-01 05:03 GMT

வழக்கு

சின்னசேலம் அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை புதுார் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன்,36; இவரது உறவினர் சின்னராசு மனைவி மாரியம்மாள்,28; இருவரது குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 29 ம் தேதி இரவு 7 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் மாரியம்மாள், மாரியாப்பிள்ளை, மாயக்கிருஷ்ணன் ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பில் மாயக்கண்ணன், இவரது மனைவி கிருபா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News