போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்த 6 பேர் மீது வழக்கு பதிவு
போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-21 13:58 GMT
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயகண்ணன் மகன் முத்து கண்ணன். இவருக்கு காளையார்கோவில் தாலுகா பூவாளி கிராமத்தில் 7 ஏக்கர் 93 சென்ட் இடம் உள்ளது. இவரது தந்தை உரிரிழந்த நிலையில், இதனையறிந்த மதுரையைச் சேர்ந்த மீனாட்சி என்கிற பெண் சிலரது உதவியோடு போலியாக ஆவணம் தயார் செய்து அவரது பெயருக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்து மாற்றியதாக 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்