அதிகாரிகள் கார் முற்றுகையிட்ட 90பேர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட 90பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 11:30 GMT

திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட 90பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் அதிகாரிகள் கார் முற்றுகையிட்ட 90பேர் மீது வழக்கு பதிவு திருப்பத்துார் அருகே விஷமங்கலம் அடுத்த அங்கநாதவலசை கிராம மக்கள் அங்குள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலை வழிபட்டு வருகின்றனர். மேலும் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதற்கான பணி கடந்த வாரம் தொடங்கியது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர், கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டினால் போக்குவரத்துக்கு இடையூர் ஏற்படும்.மேலும் இது பொதுவழி எனவே இங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு மனு வழங்கினர். அதன்பேரில் அதிகாரிகள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை நிறுத்தினர். மேலும்,சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்யப்படும் என கூறினார்.

அதனை தொடர்ந்து திருப்பத்துார் சப் கலெக்டர் ராஜசேகரன்,தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய்துறையினர் நேற்று அங்கநாதவலசை கிராமத்துக்கு நேரில் சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அதிகாரிகள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பகுதி அரசு புறம்போக்கு இடம். எனவே சுற்றுச்சுவர் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டனர். அப்போது ஆவேசம் அடைந்த கிராம மக்கள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட முறையாக இடத்தை அளந்து உத்தரவு வழங்க வேண்டும் என கூறி அதிகாரிகள் காரை முற்றுகையிட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விரைந்து சென்று அதிகாரிகளை மீட்டனர். இது குறித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விஏஓ ஆதிலட்சுமி திருப்பத்துார் கிராமிய போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஊர் கவுண்டர் வெள்ளையன் உள்ளிட்ட 50 ஆண்கள், 40 பெண்கள் என 90 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News