விவசாயியை கொலை முயற்சி செய்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு

பாலக்கோடு அருகே விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கறிஞர் உட்பட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

Update: 2024-05-13 02:30 GMT

வழக்குபதிவு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் இவருக்கு மாரண்டஹள்ளி அருகே முத்து கவுண்டர் காடு என்கின்ற கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது நிலத்திற்கு அருகே குளிர் காடு கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது இவர்களுடைய நிலத்தகரா இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று கோவிந்தன் மோட்டார் சைக்கிளில் மாரண்டஅள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பொப்பிடி அருகே சென்ற முன்னாள் சென்ற காரில் டிரைவர் ரவி, சரக்கு வாகனம் கோவிந்தன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கோவிந்தன் கீழே விழுந்தார் அப்போது கோவிந்தன் மீது சொகுசு காரை ஏற்றுக்கொல்ல முயன்றனர். எனினும் அவர் சுதாரித்து நகர்ந்து கொண்ட நிலையில் சொகுசு கார் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் கோபம் தீராமல் கொலை செய்ய அரிவால் கத்தி உடன் விரட்டியுள்ளனர். அவர்களது பிடியிலிருந்து தப்பிய கோவிந்தன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழக்கறிஞர் கோவிந்தசாமி, சட்டக் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ரவி கோவிந்தராஜ், அரவிந்த், சரக்கு வாகன டிரைவர் சாந்தகுமார் ஆறு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News