சாலையின் நடுவே படுத்து உறங்கிய போதை ஆசாமி மீது வழக்கு பதிவு
எடப்பாடியிலிருந்து பூலாம்பட்டி பிரதான சாலையின் நடுவே போதையில் படுத்து உறங்கியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-06-25 12:36 GMT
எடப்பாடியிலிருந்து பூலாம்பட்டி பிரதான சாலையின் நடுவே போதையில் படுத்து உறங்கியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்திற்கு உட்பட்ட தாவாந் தெருவை சேர்ந்த ராஜேஷ் குமார் (45 ) இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி பிரதான சாலையில் குடிபோதையில் கோணிப்பையை விரித்து போட்டு கால் மேல் கால் போட்டு படுத்துக்கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டார். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டது. இது குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இதனை அறிந்த எடப்பாடி போலீசார் பொது இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.