பெண்ணை திட்டி தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு !

சின்னசேலம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2024-04-01 05:28 GMT

 வழக்கு

சின்னசேலம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் ராயப்பனுார் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வெண்ணிலா,41; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த 25ம் தேதி இரவு 8 மணிக்கு வெண்ணிலா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன், இவரது சகோதரர் கலியமூர்த்தி, உறவினர் விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து வெண்ணிலாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News