அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பள்ளி மாணவியை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பள்ளி மாணவியை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 12:24 GMT
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பள்ளி மாணவியை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சாந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் 16 வயது சிறுமி. அருகில் உள்ள மூலனூரில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில், பள்ளி மாணவி வீட்டில் இருந்தபோது, சாந்தப்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி மகன் பிரேம்குமார், இவரது மாமா அர்ஜுனன் மற்றும் இவரது தந்தை அப்புகுட்டி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சிறுமியின் வீட்டுக்குள் தன்னிச்சையாக, அத்துமீறி உள்ளே நுழைந்து, மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தை பேசி கூச்சலிட்டுள்ளனர். பின்னர் பள்ளி மாணவியை கைகளால் தாக்கி துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தின் போது இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிக்கு உள்காயம் ஏற்பட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல பிரேம்குமாருக்கும் உள் காயங்கள் ஏற்பட்டு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கிய பிரேம்குமார், அர்ஜுனன், அப்புகுட்டி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.