அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் முன்பு அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
Update: 2024-03-14 17:42 GMT
காவல் நிலையம் முன்பு அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 12 ஆம் தேதி தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. அனுமதி இன்றி ஆர்பாட்டம் நடத்தி, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடந்து கொண்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தளி தொகுதி மகளீர் பாசறை ஜெயமேரி, தளி தொகுதி தலைவர் நாகராஜ், தளி தொகுதி பொறுப்பாளர் வீரத்தமிழன் வீரவேலு, இளைஞரணி செயலாளர் முருகன், தளி ஒன்றிய செயலாளர் ஜெகன், ஓசூர் நிர்வாகிகள் ராஜினிகாந்த், சுடலைமணி, செந்தமிழ் சேரன் ஆகியோர் மீது தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.