வடமாடு மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி வழக்கு
மாங்காம்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்த அனுமதிகோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-12 15:21 GMT
மதுரை கிளை
சிவகங்கை மாவட்டம், இடையமேலுார் அருகே மங்காம்பட்டியை சேர்ந்த அருள்ராயர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொங்கலையொட்டி மங்காம்பட்டியில் ஜன.,13 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
இன்சூரன்ஸ் செய்துள்ளோம். மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளோம், அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்குரிய அரசாணையில் மனுதாரரின் கிராமம் இடம் பெறவில்லை. மனுதாரர் அரசை அணுகலாம். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என் உத்தரவிட்டனர்