கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த ரெண்டு பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த ரெண்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.;
Update: 2024-03-15 04:39 GMT
காவல்துறை விசாரணை
கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேர் பாஞ்சாலி அம்மன் கோவில் அருகே நின்றிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் பிடிபட்டவர் 17 வயது சிறுவன் என்பதும், தப்பியோடியவர் மாயக்கண்ணன் மகன் ஆதி என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. உடன் சிறுவனிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.