நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூல்-வாடகை ஆட்டோக்களுக்கு எச்சரிக்கை

Update: 2023-11-08 06:00 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலையில் செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் தி.மலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2023ஐ முன்னிட்டு விழா நாட்களில் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் செ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், தொழிற்சங்க பிரதிநிதியும், திருவண்ணாமலை மாவட்ட அமைபபு சாரா ஓட்டுநர்அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் பேசியதாவது சென்ற ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அதை பாராட்டும் விதமாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் வேலு, அனைத்து அரசு அதிகாரிகளையும் அழைத்து விருந்து வைத்து பாராட்டினார். அதே போல் இந்த வருடம் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்ற ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட வேண்டும். தனி நபர் கட்டணமாக நிர்ணயிக்க ப்பட்ட கட்டணத்தைதவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. ஆட்டோ பயணிகளிடம் ஓட்டுநர்கள் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களோ பொருள்களோ கண்டறியப்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் சீருடையுடன் பெயர் வில்லையும் அணியவேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நடப்பில் இருக்க வேண்டும்.வாகனங்களில் கைசுத்திகரிப்பான் வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும். ஆட்டோ செல்லும் வழித்தடம் புறவழிச்சாலை அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்) புறவழிச்சாலை, அத்தியந்தல்,அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்) புறவழிச்சாலை, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை புறவழிச்சாலை (தண்டராம்பட்டு ரோடு)திருக்கோயிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை புறவழிச்சாலை (பெரும்பாக்கம்), வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம்முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடுமணலூபேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில்வரை (தண்டராம்பட்டுஅரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோயிலூர் ரோடு) திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை (அமோகா ஓட்டல்), நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை(தண்டராம்பட்டு ரோடு, பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதும் இடம்) ஆகிய ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பக்தர்கள், பொதுமக்களை அழைத்துச் செல்ல வேண்டும். நபர் ஒன்றுக்கு ரூ.30/-மட்டும் வசூலிக்க வேண்டும் என பேசினார். இந்த கூட்டத்தில் வட்டார போக்குவரத்து நேர்முக உதவியாளர் சேகர், வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிதுணை அமைப்பாளர் திவ்யாபாலசுந்தரம், மாவட்ட தலைவர் மெட்ராஸ் சுப்பிரமணியன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் அருண் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News