தலையில் டிராக்டர் எறியதில் குழந்தை தொழிலாளி பலி

குளித்தலை அருகே ஒர்க் ஷாப்பில் எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் நகர்ந்து எறியதில் தலை நசுங்கி குழந்தை தொழிலாளி உயிரிழந்த சமபவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-07 07:08 GMT

 கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த கொடிக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்திவேல் (16). இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் உள்ள தங்கலட்சுமி ஆட்டோ ஒர்க் ஷாப்பில், கடந்த இரண்டு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் 12:15 மணியளவில் பட்டறைக்கு வந்த டிராக்டரை சக்திவேல் பழுது பார்த்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் முன்னோக்கி நகர்ந்ததில் சக்திவேல் தலை டிராக்டர் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

இது குறித்து சக்திவேல் தந்தை காளிதாஸ் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த சக்திவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஒர்க் ஷாப் உரிமையாளர், வடக்கு மைலாடியைச் சேர்ந்த செந்தில்குமார் மீது குளித்தலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News