2026 ல் அதிமுக , திமுக இல்லாத கூட்டணி ஆட்சி - அன்புமணி் ராமதாஸ்

அதிமுக , திமுக போதும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் 57 ஆண்டு காலமாக தமிழகத்தை திமுக அதிமுக சீரழித்து போதும். 2026 ல் அதிமுக , திமுக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம் என பிரசாரத்தின் போது அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Update: 2024-04-12 02:08 GMT

அன்புமணி ராமதாஸ் பிரசாரம்  

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ பி முருகானந்தத்தை ஆதரித்து பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் , திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் இது மருத்துவர் ராமதாஸின் அன்புக்கட்டளை என்றார். 2 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அதிமுக , திமுக போதும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார். 57 ஆண்டு காலமாக தமிழகத்தை திமுக அதிமுக சீரழித்து போதும் என்ற அன்புமணி ராமதாஸ் 2026 ல் அதிமுக , திமுக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்றார்.

இட ஒதுக்கீடு , ஆறு காப்போம் , மதுக்கடைகளை மூடுவோம் என எத்தனை காலம் இவர்களிடம் கொஞ்ச வேண்டும் , இனி நாம் கையெழுத்து போடுவோம் என்றார். அதிமுக ஆண்டது போதும் , திமுக ஆண்டது போதும் , இனி நாம் ஆள வேண்டும் என்றும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றார். நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியகாது என தெரிந்தும் அரைகுறையாக அதிமுக இட ஒதுக்கீடு கொடுத்தது என்றும் திமுக அதைப்பற்றி பேசவில்லை என்றார். அதிமுக , திமுகவால் தமிழகத்திற்கு இனி எந்த நன்மையும் இல்லை , செய்ய முடியாது என்றும் முடிவு கட்டுவோம் என்றார்.

Tags:    

Similar News