வேலை வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

வேலை வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை.

Update: 2024-02-27 07:09 GMT

தற்கொலை 

கோவை:வடமதுரை ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா(45).தையல் தொழில் செய்து வரும் இவரது மகள் சுவாதி(21) சரவணம்பட்டி பகுதியில் உள்ள KGISL கல்லூரியில் B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் ஸ்வாதி பங்கேற்ற நிலையில் எதிலும் தேர்வாகாத நிலையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஸ்வாதியிடம் தாய் மேனகா கேட்ட நிலையில் தனக்கு விரைவில் பணி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.நேற்று மதிய உணவு அருந்திவிட்டு தனது அறைக்கு சென்றவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.ஸ்வாதி தூக்கில் தொங்குவது கண்ட அவரது தாய் மேனகா அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மரணமடைந்த மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலைக்கு தேர்வாகாத காரணமாக விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News