பழமையான மரம் முறிந்து விழுந்ததில் பரபரப்பு !!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமையான மரம் முறிந்து விழுந்ததில் வாகனகள் சேதம் ஏற்பட்டதையடுத்து மின்சாரம் பாதிப்பு ஏற்ப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-04 12:23 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவில் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் வவ்வால்கள் குடியிருந்து வந்ததால் இதை வவ்வால் மரம் என்று அப்பகுதியினர் அழைப்பது வழக்கம். இந்த மரம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்பட்டது. வவ்வால் வேட்டையாடுவதை தடுக்கவும் வதனத்துறை கண்காணித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று இந்த மரத்தின் மிகப்பெரிய கிளை முறிந்து விழுந்தது. அருகில் உள்ள கோவில் மீது விழுந்ததில் கோவிலின் ஒரு ஒரு பகுதி மற்றும் லோடு ஆட்டோ சேதமடைந்தது. இரவானதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மின்சார வயர்களும் அறுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதை அடுத்து மின்வாரிய பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விடிய விடிய சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்தை நாகர்கோவில் நகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டார்.