நாமக்கல்லில் கொமதேக சுறு சுறு.. தேர்தல் பணிகள் விறு விறு!

நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் V.S.மாதேஸ்வரன் பங்கேற்று தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசினாா்.

Update: 2024-02-28 10:42 GMT

 ஆலோசனைக் கூட்டம் 

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளுக்கு உள்பட்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொமதேகவுக்கு மீண்டும் நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொமதேக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி முகவா்கள், நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டச் செயலாளா் V.S.மாதேஸ்வரன் பங்கேற்று தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசினாா்.மாநிலச் செயற்குழு உறுப்பினா் RSR துரை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் மணி, வா்த்தக அணி செயலாளா் குரு இளங்கோ, கொமதேக உள்ளாட்சி பிரதிநிதிகள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Tags:    

Similar News