அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரியில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-11 17:32 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குசாவடி மையங்களை சரிபார்த்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம், இடங்கணசாலை, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆவணிபேரூர், வெள்ளார்நாயக்கன் பாளையம் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் 1400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதையடுத்து ஆண், பெண் இரு மையங்களாக பிரிப்பது குறித்து விளக்கிப்பேசினார். அப்போது வட்டாட்சியர்கள் சங்ககிரி அறிவுடைநம்பி, எடப்பாடி வைத்தியலிங்கம் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மகேந்திரன், கர்ணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், எடப்பாடி நகராட்சித்தலைவர் டி.எம்.பாஷா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News