இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

சங்கரன்கோவிலில் மனைவி இறந்த சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வயதான தம்பதியினருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Update: 2024-01-05 05:12 GMT

சங்கர மகாலிங்கம்,சிவஞானம்மாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் சங்கர மகாலிங்கம் (75). இவரது மனைவி சிவஞானம்மாள் (70). 50 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்து 7 ஆண், 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். சங்கர மகாலிங்கம் நெசவுத் தொழிலில் மேஸ்திரி ஆக பணியாற்றிய பின்ன அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  சங்கர மகாலிங்கத்தின் மனைவி சிவஞானம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இதனால் மன சோர்வு அடைந்த நிலையில் காணப்பட்ட சிவஞானம்மாளின் கணவர் சங்கர மகாலிங்கம் நேற்று மாலை 3:30 மணிக்கு உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாது நடந்த துயரம் அவரது குடும்பத்தின் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் இன்று கழுகுமலை சாலையில் உள்ள சுடுகாட்டில் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்படுகிறது.



Tags:    

Similar News