மிட்டப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு உயிரிழப்பு

மிட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீர் குட்டை அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு உயிரிழந்தது.

Update: 2024-02-09 15:16 GMT

உயிரிழந்த பசுமாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியில் பெங்களூரு பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே கழிவு நீர் குட்டை உள்ளது இந்தக் கழிவு நீர் குட்டையை ஒட்டியவாறு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் திறந்து விடும் பகுதிக்காக அமைக்கப்பட்ட தொட்டி உள்ளது.

இந்த தொட்டி முழுவதும் கழிவு நீர் குட்டை நீர் தேங்கியுள்ள நிலையில் அதன் அருகாமையில் உள்ள பொருட்களை மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு கழிவு நீர் கலந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தது இதில் நீரில் மூழ்கிய மாடு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தது.

மாட்டின் உரிமையாளர் மாட்டை மீட்க சென்ற பொழுது மாடு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அருகில் இருந்த நபர்களின் உதவியாள் மாட்டை உள்ளே இருந்து வெளியே எடுக்கப்பட்ட நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட திறப்பு தொட்டியின் பகுதியில் கழிவுநீர் கலந்துள்ளது.

இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அருந்தும் மக்கள் கூட்டு குடிநீர் தொட்டியில் கலந்துள்ள கழிவுநீர் கலந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

Tags:    

Similar News