மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் சுற்றுப்பயணம்
சுற்றுலா துறை சார்பில் மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் சுற்றுப்பயணம் ;
Update: 2024-03-08 08:59 GMT
ஒரு நாள் சுற்றுப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய 60 இளம் சிறார்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. மூன்று பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனுடைய குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 60 பேர் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் து.காமராஜ், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.