ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் இருந்தவர் உயிரிழப்பு
ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் இருந்த கணவனை தாக்கிய மனைவி கணவன் உயிரிழப்பு!;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் யாழரசன் வயது (43) செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி கலர் வட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரதீபா (32) என்பவரை இரண்டாவதாக திருமணம் ஆகி அவர்களுக்கு கிருத்திகா மற்றும் பிரியதர்ஷினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் யாழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது இதன் காரணமாக பிரதீபாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் பிரதீபா வாணியம்பாடியில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் யாழரசன் மூன்றாவதாக வேலூர் மாவட்டத்தைச் இந்துமதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அடிக்கடி பிரதீபாவை குடிபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது இதன் காரணமாக பிரதீபா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழரசன் கலர் வட்டத்திற்கு வந்து தனது மனைவி வீட்டிற்கு அனுப்பும்படி தகராறில் ஈடுபட்டு பிரதீபாவை குடிபோதையில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரின் தம்பியான திருப்பதி ஆகிய இருவரும் யாழரசனை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக கீழே விழுந்த யழாரசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த யாழரசன் இன்று உயிரிழந்தார். இதன் காரணமாக பிரதீபா மற்றும் அவருடைய தம்பியான திருப்பதி ஆகிய இருவரையும் ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.