பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பலி

தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-04-14 14:51 GMT

 விவசாயி பலி

தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை மேல தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வேலுச்சாமி (48). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் கிழக்குக் கடற்கரை சாலையில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஒரு வேன் இவரது பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்கு பதிவு செய்து, அந்த வேனை ஓட்டிவந்த நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த செல்வின் மகன் கார்க்கில் (37) என்பவரை கைது செய்து விசாரணைநடத்தி வருகிறார்.
Tags:    

Similar News