தனியார் பள்ளி பேருந்து மோதல்: விவசாயி பலி!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மொபெட் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-11 08:02 GMT

விபத்து

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நார்த்தன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (75). விவசாயி. இவர் இன்று இளமால்குளத்தில் உள்ள பால் பண்ணைக்கு சென்றுவிட்டு, மொபெட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நார்த்தன்குறிச்சி விலக்கில் திரும்பிய போது பின்னால் வந்த தனியார் பள்ளி பேருந்து திடீரென அவரது பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ஹரி கிருஷ்ணன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் தச்சமொழியைச் சேர்ந்த விஜயகுமார் (54) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News